ஜம்மு, ஜன.1- ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. வைஷ்ணவி தேவி சன்னதியின் கருவறைக்கு வெளியே மூன்றாம் எண் வாயில் அருகே கூட்ட புத்தாண்டு தினமான சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்த னர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சுகாதார மைய மருத்து வர் கோபால் தத் கூறும்போது, “கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக கத்ரா முகாமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார். பிடிஐ செய்தி நிறுவனம் 20 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரி விக்கிறது. இவர்களில் பெரும்பா லோர் மாதா வைஷ்ணவி தேவி நாரா யணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை “மோசமாக” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். உயிரிழந்தவர்களில் எட்டுப்பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர் களில் நான்கு பேர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத், சகாரன்பூர், கோரக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கள். ஒருவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியைச் சேர்ந்தவர். இரு வர் தில்லி பந்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்கள் 26 வயது முதல் 30 வயதிற்கு உட் பட்டவர்கள். காயமடைந்தவர்களில் 13 பேர் விவரம் தெரியவந்துள்ளது. இவர்கள் மும்பை, இராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு, மத்தியப்பிரதேச மாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர் களது செல்போன் எண்ணை வைத்து அவர்களது குடும்பத்தினரை காவல் துறையினர் தொடர்பு கொண்டனர்.
அனைவரும் 16 வயது முதல் 47 வய திற்குட்பட்டவர்கள். 13 பேரில் இரு வர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து அறிந்த பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி யில், “காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு இரங் கல்களைத் தெரிவித்துக் கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரை வில் குணமடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் அமைச்சர்கள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்தராய் ஆகியோ ருடன் பேசியுள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறி யுள்ளேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, காஷ்மீரில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரி ழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித் துள்ளார்.