tamilnadu

img

உலகிலேயே இந்தியப் பொருளாதாரம்தான் படுமோசம்.... வரலாறு காணாத வகையில் மைனஸ் 23.9 சதவிகிதமாக வீழ்ச்சி!

புதுதில்லி:
இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி தரவுகளை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (National Statistical Office) வெளியிட்டு இருக்கிறது. இதில், பொருளாதார வல்லுநர்கள் பலரும் முன்கூட்டியே கணித்தபடி, ‘2020 ஏப்ரல் முதல் ஜூன்’ வரையிலான முதலாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி படுமோசமான வகையில் 23.9 சதவிகிதம் (அதாவது மைனஸ்23.9 சதவிகிதம்) அளவிற்கு வீழ்ச்சிகண்டுள்ளது.

இதன்மூலம் மோசமான பொருளாதாரப் பாதிப்பில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.கொரோனா நெருக்கடியையொட்டி பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் அனைத்துமே கடும் அடி வாங்கியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 13.8 சதவிகிதம், இத்தாலியின் ஜிடிபிவளர்ச்சி 12.4 சதவிகிதம்; கனடா நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 12 சதவிகிதம்; ஜெர்மனியின் ஜிடிபி வளர்ச்சி 10.1 சதவிகிதம்; அமெரிக்க ஜிடிபிவளர்ச்சி 9.5 சதவிகிதம்; ஜப்பான் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவிகிதம் என்று சரிவைக் கண்டுள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக பிரிட் டன் 20.4 சதவிகித ஜிடிபி சரிவைக் கண்டது. ஆனால், தற்போது இந் தியா பிரிட்டனைக் காட்டிலும் மோசமாக 23.9 சதவிகித ஜிடிபி சரிவுக்கு உள்ளாகி இருக்கிறது.இந்தியாவின் உற்பத்தி துறைமைனஸ் 39.3 சதவிகிதம், சுரங்கத் துறை மைனஸ் 23.3 சதவிகிதம், மின்சாரத்துறை மைனஸ் 7 சதவிகிதம், பொதுத்துறை மைனஸ் 10 சதவிகிதம், ஹோட்டல்/டிரான்ஸ்போர்ட் மைனஸ் 47 சதவிகிதம், கட்டுமானம் 50 சதவிகிதம் எனசரிவைச் சந்தித்துள்ளன.
2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புரூ. 35 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், இது 2020 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 26 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

5 டிரில்லியன் பொருளாதாரம்  சாத்தியமே இல்லை!
இந்தியப் பொருளாதாரத்தை 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 350 லட்சம்கோடி) மதிப்புக் கொண்ட பொருளாதாரமாக உயர்த்தியே தீருவேன் என்றார் பிரதமர் மோடி.ஆனால், 2016-இல் 8.3. சதவிகிதமாக இந்திய பொருளாதாரத்தை பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி கொண்டு வந்து,2020 மார்ச்சில் 3.1 சதவிகிதமாக சரியவைத்து பள்ளத்தில் தள்ளினார். தற் போது கொரோனா அதனை மைனஸ் 23.9 சதவிகிதம் என்று மோசமாக்கி விட்டது. இதன்மூலம் 2024-25இல் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை எட்டுவதற்கு சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற் பட்டுள்ளது. தற்போது சுமாராக 2.61 டிரில்லியன் டாலராக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இது 5 டிரில்லியனை எட்ட வேண்டும் என்றால் ஆண்டுதோறும் சராசரி ஜிடிபி மதிப்பு 12 சதவிகிதமாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது தற்போதைக்கு சாத்தியமில்லை.அமெரிக்கா 1988-ஆம் ஆண்டிலும், ஜப்பான் 1994ஆம் ஆண்டிலும், சீனா 2008-ஆம் ஆண்டிலும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கடந்து விட் டன என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியே சீரழிவுக்குக் காரணம்!
இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு கொரோனாவையே முக்கியமான காரணமாக மோடி அரசு கூறி வருகிறது. நிதியமைச்சர் ஒருபடி மேலே சென்று ‘கொரோனா கடவுளின் செயல்’என்று கூறி தப்பிக்க முயல்கிறார்.ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின் அவர் கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், அவசர கதியிலான ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாககடந்த 4 ஆண்டுகளாகவே நாடு பொருளாதார வீழ்ச்சியில் பயணித்துக்கொண்டிருந்ததுதான் உண்மை என்பதை ஜிடிபி புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.2016-17 8.3 இல் சதவிகிதமாக இருந்த ஜிடிபி 2017-18-இல் 7 சதவிகிதமாக குறைந்தது. 2018-19-இன் இரண்டாவது காலாண்டில் 7.1 சதவிகிதமாக- சற்று அதிகரித்தது. மூன்றாவது காலாண்டில் 6.6 சதவிகிதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவிகிதமாகவும் சுருங்கி, 2019 இறுதியில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக சரிந்தது. இதுவே 2019-20 நிதியாண்டில் 5 சதவிகிதத்திற்கும் கீழே சென்றது.2019- 20-இன் முதல் காலாண்டில் 5.0 சதவிகிதம், இரண்டாவது காலாண்டில் 4.5 சதவிகிதம், மூன்றாவது காலாண்டில் 4.7 சதவிகிதம்,நான்காவது காலாண்டில் 3.1 சதவிகிதம் என்று இறங்கியது. இதனுடன் கொரோனா பொதுமுடக்கமும் சேர்ந்து கொண்டதால், பொருளாதாரம் 2020-21 முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சிமைனஸ் 23.9 சதவிகிதமாக அதல பாதாளத்தை நோக்கி பாய்ந்துள்ளது.