tamilnadu

img

இந்தியா எப்போதோ தற்சார்பு அடைந்து விட்டது...

மும்பை:
தற்சார்பு பாரதத்தை உருவாக்குவதற்காக, ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்ற சிறப்புத் தொகுப்பைமத்திய பாஜக அரசு அறிவித்துள் ளது.இந்நிலையில், “ரூ. 20 லட்சம் கோடி சிறப்புத் தொகுப்பு, 130 கோடி இந்தியர்களையும் அடையும். இதன் மூலம் நாடு சுயசார்பு பெறும் என்று புதிதாக கூறுவது, இந்தியா தற்போது சுயசார்பு கொண்ட நாடாக இல்லை போலும்
என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது” என்று சிவசேனா கூறியுள்ளது.

இதுதொடர்பாக ‘சாம்னா’ ஏட் டில் தலையங்கம் தீட்டியுள்ள சிவசேனா, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி டிஜிட்டல் இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்திருக்கவில்லை என்றால், இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி நேரத்தில் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடியோ கான்பரன்சிங் கூட் டங்கள் நடந்து இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் ஒரு ஊசி கூட தயாரிக்கப்படவில்லை; ஆனால் 60ஆண்டுகளில் அறிவியல், தொழில் நுட்பம், வேளாண், வணிகம், பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் அணு அறிவியல் ஆகியவற்றில் இந்தியா தற்சார்பு பெற்றுள்ளது. பி.பி.இ. கருவிகளை தயாரிக்க உதவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் போன்ற நிறுவனங்கள் தற்சார்பு இந்தியாவின் ஒரு அங்கம் என் பதை மறந்துவிட முடியாது என்றும்சேனா கூறியுள்ளது.