இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8392 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 90, 535-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்த தொற்றால் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்து 65 ஆயிரத்தை எட்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 26 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் கிட்டத்தட்ட 76 நாட்களுக்கு பிறகு தற்போது பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் சிகிச்சை பணிகளுக்கு உதவ 100 பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்று கேரளாவில் இருந்து சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஏழாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.