tamilnadu

img

நீட் தேர்விற்காக எத்தனை உயிரை பலி வாங்குவீர் தீ.ஒ.மு, வாலிபர், மாணவர் சங்கங்கள் ஆவேசம்

கோவை, ஆக.20 -  நீட் தேர்வால் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்ட மாணவி சுபஸ்ரீக்கு நீதி கேட்டும், நீட் தேர் வுவை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவையில்  வியாழனன்று இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் மற்றும் இந் திய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆர்.எஸ்.புரம்  பகுதி யைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத் தகைய நீட் போன்ற தேர்வு திணிப்பால் இனியும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறீர்கள். உடனடி யாக மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என  லியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வாலிபர், மாண வர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.  இதே கோரிக்கையை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் கோவை புலியகுளம் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞா னம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, தீ.ஓ.மு மாவட்டச் செயலா ளர் வழக்கறிஞர் வெ.ஆறுச்சாமி மற் றும் த.நாகராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.