புதுதில்லி, ஏப்.12-2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று, பன்னாட்டு நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ கடந்த ஜனவரியில் கூறியிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு, ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவிகிதமாகவே இருக்கும் என தன்முந்தைய கணிப்புகளில் இருந்து 0.2 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டது.இந்நிலையில், ஐஎம்எப் அமைப்பின்முதன்மைப் பொருளாதார ஆலோசகரும், இந்தியருமான கீதா கோபிநாத், இந்தியப் பொருளாதாரம் குறித்தும், இந்தியா ஜிடிபி-யை கணக்கிடும் முறைகுறித்தும் அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.இந்தியாவின் ஜிடிபி-யைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை, மோடிஅரசு கடந்த 2015- ஆம் ஆண்டு மாற்றியமைத்தது. அதாவது, 2004 - 2005-ஐ அடிப்படையாகக் கொண்டு, ஜிடிபி வளர்ச்சி கணக்கிடப்பட்டு வந்த நிலையில், அதனை 2011 - 2012 ஆண்டு அடிப்படைக்கு மாற்றியது. இது வரவேற்கக்கூடியதுதான். அதேநேரத்தில் நடப்பு விலைவாசி குறியீடுகள் அடிப்படையில் (ஊரசசநவே யீசiஉந), ஜிடிபி கணக்கிட்டது தவறானதாகும். ஏனெனில் எப்போதுமே நடப்பு விலை குறியீடுகள், நிலையான விலைக் (ஊடிளேவயவே யீசiஉந) குறியீடுகளை விட அதிகமாகத்தான் இருக்கும்.இதனால் பொருளாதாரத்தில் உண்மையாகவே உற்பத்தி அதிகரிக்காமல், விலை அதிகரிப்பினால் உற்பத்தி அதிகரித்தது போல ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.
உதாரணமாக 2017 - 18 நிதியாண்டில் 100 பொருட்கள் உற்பத்தி ஆகி இருக்கிறது. அப்போது நிலையான விலை10 ரூபாய் (ஊடிளேவயவே ஞசiஉந) என்றால் 100 ஓ 10 = 1,000 ரூபாய்தான் ஜிடிபி. இப்போது 10 ரூபாயை நிலையான விலையாக எடுத்துக் கொள்வோம். 2018 - 19-இல் 110 பொருட்கள் உற்பத்தி செய்து 10 ரூபாயால் பெருக்கினால் 1,100 ரூபாய்என வரும் இப்படி வருவது தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்தியாவோ 2018 - 19-ல் அதே 100 பொருட்களுக்கு 11 ரூபாய்(ஊரசசநவே யீசiஉந) என விலை வைத்துப்பெருக்கிவிட்டது. இதனால் விலை அதிகரித்து, பொருளாதாரம் வளர்ந்தது போலத் தெரிகிறதே ஒழிய, உண்மையில் பொருளாதாரம் வளரவில்லை. விலை தான் அதிகரித்திருக்கிறது.இப்போது வரை இந்தியா ஆண்டுக்கு7 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி காணும் என எல்லா உலக அமைப்புகளும், பொருளாதார வல்லுநர்களும் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே வேறு எந்த நாட்டின் பொருளாதாரமும் இத்தனை வேகமாக வளர்வதில்லை. ஆகையால் இந்தியாவில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு பொருளாதாரத் தரவுகளிலும் நம்பகத் தன்மைதேவையாக இருக்கிறது.
அதனால் தான்இந்தியாவின் தரவுகளை பிரத்யேகமாக கவனித்து வருகிறோம்.இந்திய பொருளாதார தரவுகள் மற்றும் புள்ளியியல் விவரங்களை வெறுமனே கவனித்துக் கொண்டு இருக்காமல் இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுநிதிய ஊழியர்களிடமும் இதைக் குறித்துவிவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தஆக்கப் பூர்வமான விவாதங்களின் முடிவில் ஒரு தீர்வுக்கு வருவோம்.இவ்வாறு கீதா கோபிநாத் கூறியுள்ளார்.மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் ரகுராம் ராஜனும் அண்மையில், இந்தியப் பொருளாதார தரவுகள் பற்றிய விவரங்கள் குழப்பமாக இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதோடு இந்தியப்பொருளாதார தரவுகள் மீது உலகஅமைப்புகளுக்கும், உலக நாடுகளுக் கும் நம்பிக்கை வர வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.