பெர்லினின் வீழ்ச்சி
மே 9, 1945 பாசிசம் வீழ்த்தப்பட்டு ஜெர்மனியின் தலைமையகமாக ரீச்ஸ்டாக் கட்டட உச்சியில் சோவியத் செம்படைகளால் செங்கொடி ஏற்றப்பட்டதன் 80 ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டன. அந்த வரலாற்று நிகழ்வு உண்மையில் எவ்வாறு நடந்தது? அந்த வரலாற்றை ஒரு காதல் கதையோடு புனைந்து, அழியாத வண்ணச்சித்திரமாக்கியிருக்கிறது ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக 1950 இல் சோவியத் தயாரிப்பாக வெளிவந்தது. படத்தில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளைப் பார்ப்போம்.
பகுதி 1
அலெக்ஸி இவனோவ், ஒரு கூச்ச சுபாவமுள்ள எஃகு தொழிற்சாலைத் தொழிலாளி. தனது உற்பத்தி இலக்கை விட அதிகமாக உற்பத்தி செய்வதால், லெனின் விருதைப் பெறவும், ஜோசப் ஸ்டாலினுடன் தனிப்பட்ட நேர்காணல் செய்யவும் தேர்ந்தெடுக்கப்படுகிறான். நடாஷா ஒரு சமூகப் பண்புமிக்க இலட்சியவாத ஆசிரியர். அலெக்ஸி நடாஷாவை காதலிக்கிறான், ஆனால் அவளை அணுகச் சிரமப்படுகிறான். அலெக்ஸி ஸ்டாலினைச் சந்திக்கச் செல்கிறான். அப்போது ஸ்டாலின் தனது தோட்டத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார். இவன் தயங்கி நிற்கி றான். ஸ்டாலின் அவனை அழைத்து உரையாடுகிறார். அவனது காதல் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவு கிறார், அவனிடம் கவிதை சொல்லச் சொல்கிறார். பின்னர், அவர்கள் இருவரும் ஸ்டாலினின் வீட்டில் மற்ற சோவி யத் தலைவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். மாஸ்கோவிலிருந்து திரும்பிய பிறகு, அலெக்ஸி நடாஷாவிடம் தனது காதலைச் சொல்கிறான். அவர்கள் இருவரும் காதல் மேலிட தனிமையில் ஒரு கோதுமை வயலில் நடந்து கொண்டிருக்கும்போது, சோவியத் யூனி யனை ஆக்கிரமிக்கும் ஜெர்மானியர்களால் அவர்களின் நகரம் தாக்கப்படுகிறது. அலெக்ஸி சுயநினைவை இழந்து கோமாவில் மூழ்கு கிறான். அவன் விழித்தெழுந்தபோது, நடாஷாவை காண வில்லை என்றும், ஜெர்மனியர்கள் மாஸ்கோவின் வாசல் களில் இருப்பதாகவும் அவனுக்குச் சொல்லப்படுகிறது. அவன் அதிர்கிறான். இங்கே, தலைநகரில், ஸ்டாலின் நகரத்தின் பாது காப்பைத் திட்டமிடுகிறார், மனச்சோர்வடைந்த ஜார்ஜி ஜுகோவிடம் தனது படைகளை எவ்வாறு நிலைநிறுத்து வது என்பதை விளக்குகிறார். அலெக்ஸி செம்படையில் தன்னை இணைத்துக் கொள்கிறான். 1941 அக்டோபர் புரட்சி அணிவகுப்பிலும் மாஸ்கோ போரிலும் பங்கேற்கி றான். அங்கே பெர்லினில், தனது நட்பு நாடுகளான ஸ்பெயின், துருக்கி, வத்திக்கான், ருமேனியா, ஜப்பான் ஆகியவற்றின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பிறகு, நடாஷா உட்பட சோவியத் அடிமைத் தொழிலாளர்களின் நீண்ட வரிசையைப் பார்க்கிறான் அடால்ஃப் ஹிட்லர். மாஸ்கோ வீழ்ச்சியடையவில்லை என்பதைக் கேட்டு கோபப்படுகிறான். அதனால் வால்டர் வான் பிராச்சிட்சை தனது அலுவலகத்திலிருந்து பணிநீக்கம் செய்து, ஜெர்ட் வான் ரண்ட்ஸ்டெட்டிற்கு இராணுவத் தலைமையை வழங்குகிறான். ஆனால் ஜெர்ட் வான் மறுத்து, ஸ்டா லின் ஒரு சிறந்த தலைவர் என்றும் ஜெர்மனியின் தோல்வி உறுதி என்றும் கூறுகிறார். அதனால் மேலும் கோபம் கொண்ட ஹிட்லர் ஸ்டாலின்கிராட்டைத் தாக்க உத்தர விடுகிறான். இதற்கிடையில், ஹெர்மன் கோரிங், பிரிட்டிஷ் முத லாளியான சார்லஸ் பெட்ஸ்டோனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரிட்டன் போரில் ஜெர்மனியை எதிர்த்து நின்றாலும், பிரிட்டிஷ் முதலாளியான அவன் ஜெர்ம னிக்குத் தேவையான பொருட்களை வழங்குகிறான். ஸ்டாலின்கிராடில் சோவியத் வெற்றிக்குப் பிறகு, வாசிலி சூய்கோவ், இவானோவிடம் ஸ்டாலின் எப்போ தும் செம்படையுடன் இருப்பதாகக் கூறுகிறார். கதைக் களம் யால்டா மாநாட்டிற்குத் தாவுகிறது, அங்கு ஸ்டாலி னும் அவரது மேற்கத்திய நட்பு நாடுகளும் போரின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கின்றன.
பகுதி 2
ஸ்டாலின் தனது தளபதிகளிடம், பெர்லினை யார் கைப்பற்றுவார்கள், என அவரது தளபதிகளிடமும் மேற் கத்திய நேச நாட்டுத் தலைவர்களிடமும் கேட்கிறார். ஸ்டா லினது ஜெனரல்கள் பெர்லின் நகரத்தைக் கைப்பற்று வோம் என்று பதிலளிக்கிறார்கள். அங்கே நமது காதலன் அலெக்ஸியின் காவலர்கள் பிரிவு பெர்லினை நோக்கி முன்னேறுகிறது. அதே நேரத்தில் ஹிட்லர் பதறுகிறான். அவரது வீரர்கள் இறுதி வரை போராட வேண்டும் என்று உத்தரவிடுகிறான். செம்படை வருவதற்கு முன்பு அலெக்ஸியின் காதலி, ஆசிரியர் நடாஷா அடைத்து வைக்கப்பட்டுள்ள வதை முகாமின் கைதிகளை ஜெர்மானியர்கள் தூக்கிலிடத் திட்டமிடுகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு அலெக்ஸியின் பிரிவு கைதிகளை விடுவிக்கிறது. நடாஷா மயக்கமடைகிறார், அலெக்ஸி நடாஷாவைக் கண்டுபிடிக்கவில்லை. சோவியத் படைகள் பெர்லினை நெருங்க நெருங்க ஹிட்லரும் ஜெர்மன் தலைமையும் விரக்தியில் வீழ்ந்து யதார்த்தத்தின் மீதான தங்கள் பிடியை இழக்கிறார்கள். சோவியத் படைகள் நெருங்கும்போது சுரங்கப்பாதை நிலையங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்க ஹிட்லர் கட்டளையிடுகிறான். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர். பின்னர் அவன் பதுங்கு மறை விடத்தில் தனது காதலியான ஈவா பிரவுனை மணந்து, அதன் பின்னர் இருவரும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஜெனரல் ஹான்ஸ் கிரெப்ஸ் ஹிட்லரின் மரணச் செய்தியைச் செம்படைக்கு எடுத்துச் சென்று போர் நிறுத்தத்திற்காக கெஞ்சுகிறார். நிபந்தனையற்ற சரணடை தலை மட்டுமே ஏற்றுக்கொள்ள ஸ்டாலின் உத்தரவிடு கிறார். மைக்கேல் யெகோரோவ் மற்றும் மெலிடன் காண்டாரியாவுடன் இணைந்து வெற்றிப் பதாகையை ரீச்ஸ்டாக் கட்டிடத்தில் ஏற்ற அலெக்ஸி தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர்களின் பிரிவு ரீச்ஸ்டாக்கைத் தாக்கு கிறது, மூவரும் அதன் மேல் பதாகையை ஏற்றுகிறார்கள். ஜெர்மானியர்கள் சரணடைகிறார்கள். சோவியத் ஒன்றியம் முழுவதிலுமிருந்து வரும் செம்படை வீரர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். ஸ்டாலினின் விமானம் பெர்லினில் தரையிறங்குகிறது, அவரை “அனைத்து நாடுகளின்” மக்கள் உற்சாகமாக வர வேற்கிறார்கள், அவரது படம் பொறித்த சுவரொட்டி களைப் பிடித்துக்கொண்டும், பல்வேறு நாடுகளின் கொடிகளை அசைத்தும் மகிழ்வை வெளிப்படுத்துகின்ற னர். ஸ்டாலினின் உரையில் அவர் உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கிறார். கூட்டத்தில் நின்று கொண்டி ருக்கையில், அலெக்ஸியும் நடாஷாவும் ஒருவரையொரு வர் அடையாளம் கண்டுகொண்டு மீண்டும் இணை கிறார்கள். நடாஷா ஸ்டாலினை கன்னத்தில் முத்தமிட அனுமதிக்குமாறு கேட்கிறாள். அவர்கள் கட்டிப்பிடிக்கி றார்கள், அதே நேரத்தில் பல நாடுகளின் கைதிகள் தங்கள் தங்கள் மொழிகளில் ஸ்டாலினைப் புகழ்கிறார்கள். ஸ்டாலின் அனைத்து உலகின் அமைதியையும் மகிழ்ச்சி யையும் வாழ்த்துவதோடு படம் முடிகிறது. இந்தப் படம் பெர்லின் போர் மற்றும் ஹிட்லரின் பதுங்கு குழியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய முதல் திரைப்பட மாகும். இது மோஸ்ஃபிலிம் ஸ்டுடியோவால் தயா ரிக்கப்பட்டு மிகைல் சியாரெலி இயக்கியது, பியோட்டர் பாவ்லென்கோ எழுதிய ஸ்கிரிப்ட் மற்றும் டிமிட்ரி ஷோஸ்டகோவிச்சின் இசையுடன். இது இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை வரும் தலைமுறைக்குக் கதாபூர்வமாக ஆவணப்படுத்திய படமாகும். சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினாக மிகைல் கெலோவானி நடித்தார். விளாடிமிர் ஷெவல்யேவ் ஹிட்லராக நடித்தார். சர்ச்சில், ரூஸ்வெல்ட் போன்ற அன்றைய வரலாற்றின் கதாபாத்திரங்களைப் பொருத்தமான நடிகர்கள் பல ரும் திறம்படச் செய்திருக்கின்றனர். கதை நாயகள் அலெக்சியாக போரிஸ் ஆண்டிரியேவ், கதைநாயகி நடாஷாவாக மரினா கவல்யோவா நடித்தனர். இயக்குநர் சியாரெலி இதன் படப்பிடிப்பிற்காக சுமார் 10,000 சோவியத் கூடுதல் வீரர்களை பெர்லினுக்கு அழைத்து வந்தார், மேலும் சுரங்கப்பாதை வெள்ளப் பெருக்கு காட்சிக்காக பல உள்ளூர்வாசிகளையும் பணி யமர்த்தினார்; மினியேச்சர் முறையில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தில் வரும் திறந்தவெளிப் போர்களை மீண்டும் உருவாக்க சோவியத் இராணு வத்தின் ஐந்து பிரிவுகள், அவற்றின் துணை பீரங்கி அமைப்புகள், நான்கு டாங்க் பட்டாலியன்கள், 193 இராணுவ விமானங்கள் மற்றும் 45 கைப்பற்றப்பட்ட ஜெர்மன் டாங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 1.5 மில்லியன் லிட்டர் எரிபொருள் வெடிப்புக் காட்சி களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப் படங்களில் ‘தி ஃபால் ஆஃப் பெர்லின்’ ஒன்றா கும். தயாரிப்பாளர்கள் நியூ பாபல்ஸ்பெர்க்கில் உள்ள யுஎஃப்ஏ ஸ்டுடியோக்களில் இருந்து எடுக்கப்பட்ட அக்ஃபாகலர் ரீல்களைப் பயன்படுத்தினர். இசையமைப்பாளர் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் வழங் கிய இசை படத்திற்குச் தனிச்சிறப்பு. ஜனவரி 21, 1950 அன்று - விளாடிமிர் லெனின் இறந்த இருபத்தி ஆறாவது ஆண்டு நினைவு நாளன்று இந்தப் படம் வெளியிடப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில், இது 38.4 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இது 1950 ஆம் ஆண்டின் மூன்றாவது மிகவும் பிரபல மான சோவியத் திரைப்படமாக மாறியது. இயக்குநர் மிகைல் சியாரெலி, எழுத்தாளர் பியோர் பாவ்லென்கோ, ஒளிப்பதிவாளர் லியோனிட் கோஸ்மடோவ், இசை யமைப்பாளர் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் மற்றும் நடி கர்கள் மிகைல் கெலோவானி, போரிஸ் ஆண்ட்ரேவ், விளாடிமிர் கெனிக்சன் ஆகியோருக்கு ஸ்டாலின் பரிசு, வழங்கப்பட்டது. செக்கோஸ்லோவாக்கியாவில், இந்தப் படம் 5 ஆவது கார்லோவி வேரி சர்வதேச திரைப் பட விழாவில் கிரிஸ்டல் குளோபையும் வென்றது.