articles

img

விதையில் ஒளிந்திருக்கும் இரகசியம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

விதையில் ஒளிந்திருக்கும்  இரகசியம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

மஞ்சள் நிறப் பூக்களுடனும் உறுதியான தண்டுடனும் வளர்ந்திருக்கும் சூரியகாந்தி பூக்களைப் பார்க்கும்போது மிக எளியமுறையில் மகிழ்ச்சி தரும் ஒரு சாதாரண செடியாகவே அவை நமக்கு காட்சியளிக்கின்றன. ஆனால் வானில் சூரியன் இருக்கும் இடத்தை கண்டறிய வழக்கமான முறைகளைப் அவை பயன்படுத்துவதில்லை. ஆய்வாளர்களுக்கு இது வியப்பூட்டும் புதிரான புரிந்துகொள்ள கடினமான ஒன்றாக இருந்தது. ஹெலியோட்ராப்பிஸம் பகலில் தலைக்கு மேல் இருக்கும் சூரி யனின் பாதையில் சூரியகாந்தி செடிகள் பய ணிக்கின்றன. சூரியனின் இடம்பெயர்விற்கு ஏற்ப செடியின் தலைப்பகுதி மேற்கு திசை யில் சரிகிறது. அப்போது செல்கள் தண்டின் கிழக்கு திசை நோக்கி நீள்கின்றன. பகலில்  சூரியனின் பாதையை பின்பற்றும் ஒரு தாவ ரத்தின் இந்த செயல்முறை ஹெலி யோட்ராப்பிஸம் (heliotropism) என்று அழைக்கப்படுகிறது. இரவில் செல்கள் தண்டிற்கு எதிர்திசையில் நீள்கின்றன. இதனால் அவற்றின் தலைப்பகுதி கிழக்கு நோக்கி மறுசீரமைக்கப்படுகிறது. என்றாலும் சூரிய ஒளி இருக்கும் இடத்தை அறிய அவை பயன்படுத்தும் எதிர்பாராத இந்த முறை புதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஆய்வின் முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதில் இருந்து  வேறுபட்டவை” என்று ஆய்வுக்கட்டுரை யின் ஆசிரியர்களில் ஒருவரும் கலி போர்னியா டேவிஸ் (Davis) பல்கலைக்கழக  ஆய்வாளருமான பேராசிரியர் ஸ்டேசி ஹார்மெர் (Prof Stacey Harmer) கூறு கிறார். தண்டின் ஒளி படும் பகுதியில் போட்டோட்ராப்பின்கள் (Phototropins) என்ற நீல ஒளி ஏற்பிகள் செயலூக்கம் பெறுவ தால் பல தாவரங்கள் ஒளி மூலத்தை நோக்கி  வளர்கின்றன. போட்டோட்ராப்பின்கள் தாவரங்களில் குளோரோப்ளாஸ்ட் எனப்படும் பச்சைய செல்களின் நகர்வு, இலைகளின் விரி வாக்கம், இலைத்துளைகள் திறந்து மூடும் செயல் போன்றவற்றிற்கு உதவுகின்றன. இச்செயல்கள் சிறந்த சூரிய ஒளி ஆற்றல் மேலாண்மைக்கு உதவுகிறது. இதன் மூலம் ஒளிச்சேர்க்கை அதிகரிக்கிறது. மித மிஞ்சிய ஒளியால் ஏற்படும் சேதம் குறைக் கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடை சிறந்த முறையில் பெற உதவுகிறது. இதனால் ஆக்சின்கள் (Auxins) எனப்படும் ஹார்மோன்கள் இருள் நிறைந்த  மற்றொரு பக்கம் அதிகரிக்கின்றன. ஆக்  சின்கள் செல்கள் நீள்வதைத் தூண்டு கின்றன. இவை செல் பகுப்படைதல், வேர்  மற்றும் தண்டு வளர்ச்சி, சூரிய ஒளி மற்றும்  புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரத்தின் ஒரு பக்கத்தில் செல் பகுப்பு நடைபெற உதவு கின்றன. ஆக்சின்களின் தூண்டுதலால் செடியின் தண்டு ஒளியை நோக்கி வளைகிறது. இந்த  ஆய்வு சூரியகாந்திச் செடிகள் உட்புறப்பகுதி யில் எவ்வாறு செயற்கை ஒளியை நோக்கி வளைகின்றன என்பதை விளக்குகிறது. ஆனால் அவற்றின் இந்த செயல்முறை திறந்தவெளியில் அவை சூரிய ஒளியை நோக்கி பயணிக்கும் செயல்முறையில் இருந்து வேறுபட்டதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றிய ஆய்வுக்கட்டுரை ப்ளோஸ் பயாலஜி (journal Plos Biology) என்ற  ஆய்விதழில் வெளிவந்துள்ளது. ஆய்வா ளர்கள் உட்புறத்தில் வளரும் சூரியகாந்தி தண்டில் நீல ஒளி ஒரு திசையில் இருந்து  செலுத்தப்படும்போது செயல்படும் மரபணு  எது என்பதை முதலில் ஆராய்ந்தனர். இதில் இருந்து தண்டில் போட்டோட்ராபின்களுடன் தொடர்புடைய மரபணுக்கள் ஒளி இருக்  கும் பக்கத்தில் முதன்மையாகச் செயல்படத்  தொடங்குகிறது என்று தெரியவந்தது. நிழலும் ஒளியும் அப்போது நிழல் இருக்கும் பக்கத்தில்  ஆக்சின்கள் மற்றும் செல்களின் வளர்ச்சி யும் ஆரம்பிக்கிறது. இதில் இருந்து உட்புறங்களில் வளரும் சூரியகாந்திச் செடிகள் நீல ஒளியை பயன்படுத்தி வளர்கின்றன என்று கண்டறியப்பட்டது. ஆனால் வெளியில் வளர்பவற்றில் தண்டு களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்படுபவற்றில் இருந்து வேறுபட்டவை என்று ஆய்வாளர்கள் கண்ட றிந்தனர். சூரிய ஒளி விழும் தண்டின் கிழக்கு  மற்றும் நிழல் இருக்கும் மேற்கு திசைகளில் மரபணுக்களின் செயல்பாடுகளில் சிறிய வேறுபாடுகளே இருந்தன. உட்புறம் மற்றும் வெளியில் வளரும் செடிகளில் ஆய்வாளர்கள் நீல, புற ஊதா, சிவப்பு மற்றும் தொலைதூர சிவப்பு ஒளி களை தடை செய்து ஆராய்ந்தனர். வெளி யில் வளரும் செடிகளில் இத்தகைய பல நிற  ஒளிக்கற்றைகளில் இருந்து சமிஞ்ஞைகள் வரும் பாதைகள் ஒரே நேரத்தில் செயல்படு கின்றன என்பது தெரியவந்தது. உள்ளே வள ரும் செடிகள் வெளியில் வைக்கப்பட்ட போது அவை உடனே சூரிய ஒளியின் பாதையை பின்பற்றத் தொடங்கின என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. ஆனால் வெளியில் வைக்கப்பட்ட முதல்நாளில் செடியின் தண்டில் வேறுபட்ட  பாணியில் அமைந்த மரபணுக்கள் செயல்படத் தொடங்கின. உள்ளேயும் அதற்கடுத்த நாட்களில் வெளியிலும் செடியை வைத்து ஆராயப்பட்டது. நிலை மையை சரி செய்ய வேறொரு செயல்முறை யை செடிகள் பின்பற்றுகின்றன என்று  அப்போது தெரியவந்தது. கட்டுப்படுத் தப்பட்ட சூழலில் ஆராய்ந்தபோது கிடைத்த  இந்த முடிவுகள் இயற்கையான சூழலில் வளரும் செடிகளில் பிரதிபலிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஹார்மெர் கூறு கிறார். உலக மெய்நிகழ் சூழ்நிலையிலும் சூரிய  ஒளி இருக்கும் இடத்தை அறிந்து பய ணிப்பதிலும் சூரியகாந்திச் செடிகளில் காணப்படும் செயல்முறைகள் விஞ்ஞானி கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிக்கலா னவை என்று ஹார்மெர் கூறுகிறார். விஞ்ஞா னம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் இயற்கை யின் புதிர்களுக்கு விடை காண்பது அவ்வ ளவு சுலபமானதில்லை என்று ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.