பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் 25 ஆண்டுகாலமாக இல்லாத அளவிற்கு பெய்து வரும், கனமழை மற்றும் வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-ஐ தாண்டியுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை, கடந்த 25 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களை பாதித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இக்கனமழையால் பீகார், உத்திரபிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம், ரயில் சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளப்பாதிப்பினால் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் , இன்னும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.