tamilnadu

img

இறக்குமதியைத் தவிர்க்க முடியாது.... வாகனங்கள், மருந்துகளின் விலை உயர்ந்து விடும் 

புதுதில்லி:
சாத்தியமான மற்றும் செலவு குறைந்த மாற்று வழிகள் கண்டறியப்படும் வரை, சீன இறக்குமதியைத் தங்களால் தவிர்க்க முடியாது என்று இந்திய ஆட்டோமொபைல் மற்றும் மருந்துத் தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2018-19 ஆம் ஆண்டில், இந்தியா 17.6 பில்லியன்டாலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்தது. அதில் 27 சதவிகிதம் (4.75 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள்) சீனாவிலிருந்துவந்தவை என்று ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.“வாகன உதிரிபாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை; அல்லது விரும்பும் தரத்தில் இல்லை; ஒருவேளை தரத்துடன் இருந்தாலும் விலைஅதிகமாக உள்ளது. மேலும், இந்த கூடுதல் விலையை நுகர்வோரே சுமக்கவேண்டியதாகி விடுகிறது. எனவே, விலை மலிவான உதிரிபாகங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது” என்று கூறியிருக்கிறார் ‘மாருதி சுசுகி’ இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா.அதேபோல, கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா மலிவான விலையில், மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றால், அதற்குசீன மூலப்பொருட்களே காரணம் என்று மருந்து தயாரிப்பு துறையினர் கூறியுள்ளனர்.

சன் பார்மா, லூபின், சிப்லா, காடிலா, பிசிஏ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய 24 மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் மருந்து ஏற்றுமதியில் 80 சதவிகிதமும், உள்நாட்டு சந்தையில் 57 சதவிகிதமும் பங்காற்றுகின்றன. இவை தங்களின் ஏபிஐ மூலப்பொருட்களுக்கு சீனாவையே நம்பியுள்ளன. அவ்வாறிக்கையில், சீனாவைத் தவிர்க்க நினைத்தால் அது இந்தியாவுக்குத்தான் நஷ்டமாகும் என்றும் மருந்துகளின் விலை; அதிலும் குறிப்பாகமுக்கிய ஆண்டிபயோடிக் மருந்துகளின் விலை கடுமையாக கூடும் என்றும்தெரிவித்துள்ளனர்.