புதுதில்லி:
சீனாவின் உகான் நகரில் கொரோனாவைரஸ் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் உகானில் இருந்து 76 இந்தியர்கள் மற்றும் வங்காளம், மியான்மர், மாலத்தீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 36 வெளிநாட்டவர்களுடன் இந்திய விமானப்படையின் விமானம் வியாழனன்று தில்லி வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியர்களை திரும்ப அழைத்துவர ஒத்துழைப்பு அளித்த சீன அரசுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இந்தியர்கள் 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப்படையின் போயிங் சி 17 விமானம் மூலம் சுமார் 15 டன் மருந்துகள் இந்தியா சார்பில் தில்லியில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டன.