tamilnadu

img

நிதியமைச்சரின் விருந்தைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்

புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தை, நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர்.மத்திய நிதியமைச்சராக இருப்பவர்கள், பட்ஜெட் தாக்கலுக்குப் பின், பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளிப்பது, நீண்டகால நடைமுறையாக உள்ளது. இதன்படி தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால், அந்த விருந்தில் இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்து 2 செய்தியாளர்கள், பைனான்சியல் எக்ஸ்பிரசில் இருந்து2 செய்தியாளர்கள், பிடிஐ நிறுவனத்திலிருந்து 2 செய்தியாளர்கள், ஏஎன்ஐ நிறுவனத்திலிருந்து 1 செய்தியாளர் என மொத்தம் 7 செய்தியாளர்களும், பத்திரிகை ஆசிரியர்கள் என்ற வகையில் 16 பேரும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்த விருந்தைப் புறக்கணித் துள்ளனர்.புதுதில்லியின் நார்த் பிளாக் பகுதியிலுள்ள நிதியமைச்சக வளாகத்திற்குள் அங்கீகாரம் மற்றும் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே பிரவேசிக்க முடியும் என்று அண்மையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, நிதியமைச்சரின் விருந்தை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தாக கூறப்படுகிறது.