புதுதில்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டி-தான் முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் (¡õibek Debroy) கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் தேப்ராய், “ஜிஎஸ்டி-யின்பாதிப்பு எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூற இயலாது; ஆனால், பொருளாதார வளர்ச்சி மந்தமானதற்கு ஜிஎஸ்டியே காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து கொண்டே போகிறது என்றாலும், மேலும் வரியை குறைக்க வேண்டும்; அதற்கு இதுவே சரியான தருணம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை அடைவது மிகவும் கடினம் என்று கூறியுள்ள பிபேக் தேப்ராய், தனிநபர் வருமான வரியை அரசு கண்டிப்பாகக் குறைக் கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.