india

img

தடுப்பூசியை வேகப்படுத்துவதே பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்... தலைமைப் பொருளாதார ஆலோசகர் கருத்து..

புதுதில்லி;
தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவதே மக்களுக்கு மட்டும் அல்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

‘தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது கொரோனா 3-வது அலையை வரவிடாமல் தடுக்கும். அதே நேரத்தில் பொருளாதாரமும் மீண்டெழுவதற்கு உதவும். பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ளதால், அதைப் பிரித்துப் பார்க்க முடியாது’ என்று வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் செல்வதற்கு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தும் டோஸ்கள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறினாலும், அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கும் சுப்பிரமணியன், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை நாடு அடையும் என இப்போதே கூறுவது கடினமான ஒன்று என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.