நிதி வெறும் மூவாயிரத்து ஐநூறு கிலோ மீட்டருக்கு மட்டுமே. இது பாதுகாப்பை ஒரு பெரிய கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதேபோல 2022ல் 100ரூ மின்மயம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அப்படியானால் இந்த ஆண்டு 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு நீங்கள் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும் . ஆனால் இப்போது ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கான நிதி மட்டுமே.
தாம்பரம் தனியார்மய முனையமா?
அதே போல தனியார்மய த்தில் மிக முக்கியமாக தென்னக ரயில்வேயில் 11 இரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும் இயக்கப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதாவது தாம்பரத்தை முழுமையாக தனியார் மயத்தினுடைய முனையமாக மாற்றுகிற ஒரு முயற்சியில் இருக்கிறது. இதை வன்மையாக நாங்கள் கண்டிக் கிறோம். அதேபோல கோவையில் இருந்து மங்களூருக்கு இயக்கப்பட இருக்கிற தேஜஸ் இரயிலை தனியாருக்கு விடுவதாக இப்போது அறிவிப்பு வந்திருக்கிறது. இதுவும் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல ஐசிஎப் உள்ளிட்டு ஏறக்குறைய 8 உற்பத்தி நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும் என்ற இந்த அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்குகிற அறிவிப்பாக மொத்த ரயில்வேயையும் தனியாருக்கு தாரைவார்க்கிற அறிவிப்பாக இருக்கிறது. எனவே இவற்றை அரசு கைவிட வேண்டும்.