புதுதில்லி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும்இலவச வைஃபை சேவையை நிறுத்திக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்தியா மட்டுமின்றி நைஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ரயில் நிலையங்களில் இணையசேவை பயன்பாட்டிற்காக இலவச வைஃபை இணைப்பை கூகுள் நிறுவனம்வழங்கி வந்தது. இந்தியாவில் கடந்த5 ஆண்டுகளாக இந்தச் சேவை பயன்பாட்டில் இருந்து வந்தது.இந்நிலையில் வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து அதன் இணைய பிளாக்கில் பதிவிட்டுள்ள கூகுளின் துணைத்தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிகம்இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விலை குறைந்த இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. மொபைல் போன் மூலம் எளிதில் இணையத்தைப் பயன்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.