புதுதில்லி:
மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு ‘செஸ்’ வரி விதிக்கப்பட்டிருப்பதால் அவ்வகை உபகரணங்களின் விலை அதிகரிக் கும் என்று இந்திய மருத்துவ தொழில்நுட்பச் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த ‘செஸ்’ வரி விதிப்பின் விளைவாக, சிகிச்சை பெறும் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரித்துள்ளது.பிரதமர் மோடி கொண்டுவந்த ‘பிரதான் மந்திரி ஜன்ஆரோக்ய யோஜனா’ திட்டத்துக் கும், இந்த வரிவிதிப்பு எதிரானதாக அமைந்துள்ளது என்று மருத்துவ தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
‘மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்கெனவே 7.5 சதவிகிதம்வரை வரி விதிக்கப்படுகிறது. தற்போது ‘செஸ்’ வரியாக 5 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உபகரணங்களின் விற்பனைவிலை அதிகரிக்கும். இந்த விலைஉயர்வை, இறுதியாக சிகிச்சை பெறுபவர்களே சுமக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்தவரி விதிப்பு மருத்துவ துறையை மட்டுமல்ல மக்களையும் நேரடியாக பாதிக்கக் கூடியது ஆகும்.முக்கிய உபகரணங்கள் எதுவும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. ரும்பாலானஅதிநவீன மருத்துவ உபகரணங் கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அவ்வாறிருக்கையில், இந்த வரிவிதிப்பால் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டுக்குள் கொண்டுவருவது அதிகரிக்கும்’ என்று இந்திய மருத்துவ தொழில்நுட்ப சங்கத்தின் இயக்குநர் சஞ்சய் பூட்டானி தெரிவித்துள்ளார்.