புதுதில்லி:
பிட்காயின் வர்த்தகத்து க்கு ரிசர்வ் வங்கி விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து,அதன் வர்த்தகத்திற்கு அனுமதியளித்துள்்ளது.பிட்காயின் என்னும் மெய்நிகர் டிஜிட்டல் கரன்சிகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டுஏப்ரல் இந்திய ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. இதற்குஎதிராக இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிட்காயினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் செய்யலாம் என்றும் வங்கிகளும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.