india

img

உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ள குடியரசுத் தலைவர்!

‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயத்தை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?' உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின்  தீர்ப்பில், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனவும், மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்திருந்தது. 
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு, ‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயத்தை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?' உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.