சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021-ஆம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த 5 நீதிபதிகளும் இன்று நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.