பியர் கிரில்ஸின் ‘இன் டு தி வைல்ட்’ (Into The Wild) நிகழ்ச்சியில், யானையின் கழிவில் தயாரிக்கப்பட்ட தேநீரை இந்தி நடிகர் அக்சய் குமார் குடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், எப்படி இவ்வாறு குடித்தீர்கள் என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே நான் தினமும் பசுவின் சிறுநீர் குடிப்பவன்தான்” என்று அக்சய் பதிலளித்துள்ளார்.