tamilnadu

img

கஞ்சா பயன்பாட்டில் தில்லி, மும்பைக்கு முதலிடம்... போதையில் முன்னேறும் மோடியின் இந்தியா

புதுதில்லி:
மத்திய பாஜக அரசின் ஆட்சியில் ஹெராயின், கஞ்சா, போலிமதுபானம் போன்ற போதைப் பொருட்களின் கடத்தல் மற்றும்அவற்றின் பயன்பாடு முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின்தில்லி மற்றும் மும்பை நகரங்களில்கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தஏபிசிடி (ABCD) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி போதைப்பொருள் பயன்பாட்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம்தான் (77.4 டன்)உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (42 டன்) உள்ளது.இதற்கடுத்த மூன்றாவது இடத்தில்தில்லி (38.2 டன்) வந்துள்ளது.நான்காவது இடத்தை, மீண்டும் அமெரிக்காவின் நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சலிஸூம் (36டன்), 5-ஆவது இடத்தை எகிப்தின்கெய்ரோ-வும் (32.5 டன்) பிடிக்கஇந்தியாவின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மும்பை (32.3) 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. லண்டன் 7-ஆவது இடத்தில் உள்ளது.

அதேபோல உலகளவில் கஞ்சா மிகவும் மலிவாக கிடைக் கும் இடங்களின் பட்டியலிலும் தில்லிஇடம்பிடித்துள்ளது.குறைந்தவிலையில் கஞ்சா கிடைக்கும் முதல் 10 இடங்களில், தென்அமெரிக்க கண்டத்தின் 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில், தில்லியும் மும்பையும்முறையே 10 மற்றும் 11 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.இந்தியாவில் கஞ்சா பயன் பாட்டை சட்டப்பூர்வமாக்குவதில் ஏற்படும் தோல்வி, வரி வருவாயிலும் பெரியளவிற்கு இழப்பை ஏற் படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.