தில்லி
நாட்டின் தலைநகர் பிரதேசமான தில்லியில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் அம்மாநில அரசு கொரோனா பரிசோதனையை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 14,053 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது இந்த தகவலைத் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் நாட்டின் கொரோனா பாதிப்பு பட்டியலில் தில்லி 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.