சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த 3 நாட்களாக மந்தமான வேகத்தில் பரவி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாகச் சென்னையில் 47 பேரும், மதுரையில் 4 பேரும், விழுப்புரத்தில் ஒரு நபருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
இன்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தமிழகத்தில் 809 கொரோனா நோயாளிகள் மட்டுமே உள்ளனர். வீட்டு கண்காணிப்பில் 29,797, அரசுக் கண்காணிப்பில் 36 பேர் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் இறக்கவில்லை. மொத்த பலி எண்ணிக்கை 24 ஆக உள்ளது.