புதுதில்லி:
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தவறானதகவல்களைக் கையாள்வதில் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது தொடர்பாக ஆசியாவில் 12 நாடுகளை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மைக்கேல் பேச்லெட் விமர்சித்தார். மேலும் அந்த முடிவை அடைவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊடுருவும் அணுகுமுறையை எடுக்கவும் அவர்களுக்கு பரிந்துரைத்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பொறுப்பான பங்களிப்பை செய்யுமாறு இந்தியா மற்றும் இந்தோனேசியா தலைமையிலான எட்டு நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்திற்கு (OHCHR) ஒரு கடிதம் எழுதியுள்ளன.