கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்டவிரோத விஷச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பாதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கில் 20க்கும் மேற்பட்டோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.