tamilnadu

img

சீனாவில் ‘கொரானா’ வைரஸ் தாக்குதல்... இந்தியர்களுக்கு எச்சரிக்கை

பெய்ஜிங்:
சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்கிருந்து இந்தியா வருவோருக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கடந்த சில தினங்களாக ‘கொரானா’ வைரஸ் பரவி வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன் பரவிய ‘சார்ஸ்’ வைரஸ் போன்று இந்த வைரசும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, காய்ச்சல் என பல்வேறு அறிகுறிகளுடன் தாக்கி வருகிறது. கடந்த சில தினங்களில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு இருவர் உயிரிழந்தனர்.இந்நிலையில், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், சீனாவில் புத்தாண்டு அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ளது. 

இதையொட்டி, இந்திய மாணவர்கள் அதிகம் பயிலும் வூஹான் நகரில் இருந்துபலர் இந்தியா செல்லக் கூடும். இவ்வாறு இந்தியாவுக்குச் செல்லும்போது நடுவழியில், சுவாசக்கோளாறு, காய்ச்சல் போன்றஅறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விமான நிலைய மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்து, சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் மனிதர்களைத் தொடுவதன் மூலம் பரவுவதாகக் கூறப்படுவதால் தகுந்தபாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.