ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட பயணிகள் இரண்டு முறை பயணம் செய்துள்ளனர். இதனால், அக்டோபர் 2 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களைத் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் கொரோனா நோயாளிகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இரண்டு முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா விமானங்கள் துபாயில் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானங்களில் கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றுக்கான சான்றிதழ்களுடன் உள்ள பயணிகளை இரண்டு முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா கூறப்பட்டது. இதனையடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் அரசாங் விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் செய்யப்பட வேண்டும். சோதனையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை எனச் சான்றிதழ்களைக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் செப்டம்பர் 2 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு பயணி, செப்டம்பர் 4 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் ஜெய்ப்பூர் - துபாய் விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஏற்கனவே, இதே போன்று ஒரு விமானி மற்ற விமானங்களில் பயணித்தவருடன் நடந்துள்ளது. இதனால், துபாய் சிவில் ஏவி யேஷன் ஆணையம் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை ஏர் இந்தியா விமானங்களை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.