தில்லி
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது நாடான இந்தியாவில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. தினமும் 1000-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிக்கக்கூறி 5-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வலியுறுத்திவந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 451 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 939 உள்ள நிலையில், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 590 பேர் கொரோனவால்;பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 369 பேர் பலியாகியுள்ள நிலையில், குஜராத், தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.