இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 100 ஆண்டு (1920 முதல் 1947 வரையிலான) வரலாற்றை விளக்கிடும் நூல் தலைநகர் புதுதில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் இந்நூலை வெளியிட்டனர். பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூலின் முக்கியத்துவம் குறித்து சீத்தாராம் யெச்சூரியும், பிருந்தா காரத்தும் விளக்கினார்கள். (ந.நி.)