tamilnadu

img

33 கோடி பேர்களுக்கே மத்திய அரசு நிவாரணம்... புள்ளிவிவரத்தில் மத்திய அரசு குளறுபடி

புதுதில்லி:
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு காலத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் (பிஎம்ஜி கேபி) மூலம் நாட்டில் 39 கோடியே 28 லட்சம்பயனாளிகளுக்கு ரூ. 34 ஆயிரத்து 800 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் கூறியிருந்தது.ஆனால், இந்த எண்ணிக்கை சரியல்ல என்றும், கணக்குப்படி 33 கோடியே 71 லட்சம் பேர்கள்தான் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு நிவாரணத்தை பெற்றவர்களாக உள்ளனர் என்று புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் 20 கோடியே 50 லட்சம் பெண்கள் முதல் தவணையாக ரூ.500 பெற்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவர்களில் 5 கோடியே 57 லட்சம் பேர்2-ஆவது தவணையாகவும் ரூ. 500 பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல் தவணையான ரூ. 500 பெற்ற பெண் இரண்டாவது வணையையும் பெற்றால் அது எப்படி இன்னொருபயனாளர் என்ற கணக்காகும் என்று ஆங் கில ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

39 கோடி பயனாளர்கள் என்பதில் பலதரப்பட்ட பயனாளர்களும் அடங்குவார்கள்.ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்கள்ஓய்வூதியம் பெறுபவர்களாகவும் இருப்பார் கள் கட்டுமானத் தொழிலாளர்களாகவும் இருப்பார்கள், விவசாயிகளாகவும் இருப்பார்கள், இவர்களை தனித்தனி பயனாளர்களாகக் கணக்கிட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தன. இதனை நிதியமைச்சக செய்தித்தொடர்பாளரும், அரசின் ‘கணக்கீடு தவறுதான்’ என்று தற்போது ஒப்புக் கொண்டுள் ளார். சரியான எண்ணிக்கை 33 கோடியே 70 லட்சம் பயனாளர்கள்தான் என்றும் தெரிவித்துள்ள அவர், அமைச்சகத்தின் புள்ளிவிவரம் திருத்தப்படும் என்று மழுப்பியுள்ளார்.