districts

நீட் தேர்வு குளறுபடி தொடங்கியது

மதுரை, மே 3-நீட் தேர்வு வருகிற 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற உள்ள நிலையில் குழப்பமும்தொடங்கிவிட்டது. மதுரையில் உள்ள பல தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுவிட்டன. திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் தேர்வெழுத வேண்டிய சுமார் 600 பேர் மதுரையில் தேர்வெழுதுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.தேசிய அளவிலான மருத்துவம் சார்ந்த படிப்புக்கான நீட் தேர்வு வருகிற 5-ஆம் தேதி நாடு முழுவதும்நடைபெறுகிறது. தமிழகத்திலும் நீட் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மதுரையில் சுமார் 18 ஆயிரம் மாணவ-மாணவி கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்தநிலையில் பல மாணவ-மாணவிகளின் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.ரோல் நம்பர் 410602881 முதல் 410603660 வரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியிலும் ரோல் நம்பர் 410608041 முதல் 410608640 வரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஏ.வலையபட்டி பாண்டிக்குடி லட்சுமி நாராயண வித்யாலயா பள்ளியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ரோல் நம்பர் 410611401 முதல் 410611880 வரைவிரகனூர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் 410611881 முதல் 410612360 வரை தோப்பூர் தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியிலும் தேர்வெழுத வேண்டும்.ரோல் நம்பர் 410612841 முதல் 410613320 வரைதிருநகர் 3-ஆவது நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ராமாச்சாரி நினைவு மெட்ரிக் பள்ளியிலும் ரோல் நம்பர் 410616201 முதல் 410616560 வரை மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியிலும் நீட் தேர்வு எழுதலாம்.மதுரையில் உள்ள மையங்களை மாற்றியதற்கு வேண்டுமானால் ஏதாவது காரணத்தை நேஷனல் டெஸ்டிங் அகாடமி கூறலாம். ஆனால்சம்பந்தமேயில்லாமல் திருநெல்வேலி தியாகராஜாநகரிலுள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதும் சுமார் 600 பேர் திடீரெனமதுரைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் தான் தெரியவில்லை.மேலும் தெளிவான கூடுதல் விவரங்களை றறற.வேயநேநவ.niஉ.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.