லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் தடுப் பூசி போடாத இரண்டு பேருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2-ஆவது அலையின் தாக்கம் மோசமாக இருந்தது. தற்போதுதான் கொரோனா பாதிப்புமெல்லக் குறைந்து 50 ஆயிரத்திற் குக் கீழ் சென்றுள்ளது. அடுத்த அலை ஏற்படுவதற்கு முன் தடுப்பூசிபோடும் பணிகளை அரசு வேகப் படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தடுப்பூசியே போடாத இரண்டு பேருக்கு சான்றிதழ் மட்டும்வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் மங்கலம். அவர் கோவாக்சின்முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில், 2-ஆவது டோஸ் தடுப் பூசி போடாமலேயே அவருக்கு தடுப்பூசி சான்றிதழ் மட்டும் வழங் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது, கவனக்குறைவு காரணமாக இந்த பிழை ஏற்பட்டதாகவும் தடுப்பூசி மையத்திற்கு வந்து 2-ஆவதுடோஸை எடுத்துக் கொள்ளும்படியும் கூறியுள்ளனர். அவரும் மையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் 2 டோஸ் தடுப்பூசி ஏற்கெனவே போட்டுக் கொண்டதாகக் ‘கோவின்’ தளத்தில் உள்ளதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கைவிரித் துள்ளனர்.
மவு மாவட்டத்தில், 65 வயதான உம்தா ராய் என்பவரும் இதேபோன்ற சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். சிறப்பு என்னவென்றால், மாணவர் மங்கலத்திற்காவது முதல் டோஸ் செலுத்தப்பட்டது. ஆனால், உம்தா ராய்க்கு முதல் டோஸே வழங்கப்படவில்லை. தடுப்பூசி போட்டதாக சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகப் புகார் அளித்ததாகவும் இருப்பினும்கூட வேக்சின் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் 14 வயதுச் சிறுவனுக்கு தடுப்பூசி போட்டதாகக் கூறி சான்றிதழ் அனுப்பப்பட்டது குறிப்பிடத் தக்கது.