tamilnadu

img

பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி.... ரூபன் திட்டத்தில் குளறுபடி... மக்கள் நலத் திட்டங்கள் சரியான பயனாளியை சென்றடைய வேண்டும்

மதுரை:
பிரதமரின் கிசான் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. “ரூபன்” திட்டத்தில் குளறுபடி நடைபெற்றது மக்கள் நலத் திட்டங்கள் சரியான பயனாளியை முறையாக சென்றடைவதை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் உள்ளது எனமதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.

மதுரை வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு மதுரை மாவட்டத் தலைவரும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடந்த பிப்ரவரி 20-ஆம்தேதி முதல் கூட்டம் நடைபெற்றது அதற்கு பின் இரண்டாவது கூட்டம்செப்டம்பர் 7- ஆம் தேதி நடத்தப்பட் டுள்ளது ஆறு மணி நேரம் நடைபெற்றகூட்டத்தில் 23 அரசு துறைகளில் நடைபெற்ற பணிகள் கூறித்து பேசப்பட்டது.மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு இக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும். மதுரையில் இரண்டாயிரம் கோடிமதிப்பிளான ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

அதில் பல தகவல்கள், புள்ளிவிவரங்களை “டிஷா” கமிட்டி கேட்டுள்ளது. அதை மாநகராட்சி ஆணையாளர்மான விசாகன் தருகிறேன் என்று கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்கான ஆலோசனைக் குழு அமைக் கப்பட்டிருக்க வேண்டும் அதற்கு தலைவராக மாவட்ட ஆட்சியர் துணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர், உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் அதற்கான கூட்டம் நடைபெறவில்லை. அந்தக் கூட்டத்தை ஒரு மாதத்தில் நடத்த வேண்டும்.பெரியார் பேருந்து நிலையம் தமுக்கம் மைதானம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் கட்டப்பட்டு வரும்பல்லடுக்கு வாகன காப்பகம் ஆகியபகுதிகளில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டு உள்ளது அது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெங்கடேசன், “இந்த மூன்று இடங்களில்பல கியூபிக் டன் மண் எடுக்கப்பட்டுள்ளது அது எங்கே கொட்டப்பட்டுள் ளது? கனிமவளத்துறை அதை கணக் கிட்டுள்ளதா? என்ற விவரங்களை அறிக்கையாக “டிஷா” கமிட்டி கேட் டுள்ளது. 

“டிஷா” கமிட்டியில் மத்திய- மாநிலஅரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளது. மூவரும் இணைந்து செயல் படும்போது சில முரண்பாடுகள், குறைபாடுகள் வரும். சில விஷயங்களில் முறைகேடுகள் இருக்கும் இவைகளைக் கண்டறிந்து மாவட்டத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் முறையாக சரியான பயனாளியை சென்றடைகிறதா? என்பது கூட்டத்தின் நோக்கம். அதில் தவறுகள் நடைபெற்றால் அதன் மீதுடிஷா கமிட்டி நடவடிக்கை எடுக்கும் என்றார்.பிஎம் கிசான் திட்டத்தில் மதுரைமாவட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடைபெற்றுள்ளது சுமார் 16 ஆயிரத்து 474 பேர் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் அதில் 11 ஆயிரத்து 135 பேர் தகுதியற்றவர்கள் போலி ஆவணங்கள் மூலம் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார் இதில் ஒரு சிலருக்கு ஒரு தவணை, இரண்டு தவணையாக ரூபாய் 2000 முதல் நான்காயிரம் வரை வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. சுமார் ரூ.7.6 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 135 பேருக்கு எவ்வளவு பணம் சென்றுள்ளது என்பது குறித்த புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. அதை கணக்கெடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. “ரூபன்” திட்டத்தில் பலகுளறுபடிகள் நடந்துள்ளது அதுகுறித்தும் அறிக்கை அளிக்க வலியுறுத்தியுள்ளேன். ரூபன் திட்டத்தில் பல வேலைகளை நீக்கவேண்டும் என்றார்.