புதுதில்லி:
வாடகைத்தாய் ஒழுங்குபடுத்தும் மசோதா, வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புதனன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குழந்தை பேறு இல்லாத தம்பதி யருக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தைபெற்றுத்தரும் பெண்கள் உள்ளனர். சம்பந்தப்பட்ட தம்பதிக்கு நெருங்கிய உறவுக்கார பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும் என்று கூறும் மசோதா, கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், மாநிலங்களவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பப் பட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா உருவாக்கப் பட்டுள்ளது. நெருங்கிய உறவுப்பெண் மட்டு மின்றி, விருப்பமுள்ள எந்த பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கலாம் என்றும் விதவைகள், விவாகரத்து ஆன பெண்கள் ஆகியோரும் பலன் அடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.