tamilnadu

img

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி,ஆக.27- புதுவை சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.28) முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவையின்  பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று(ஆக.26) ஆளு நர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி னர். இதனையடுத்து, புதன்கிழமை காலை  9.30 மணிக்கு  பட்ஜெட் தாக்கல் செய்யப்படு கிறது. முதலமைச்சரும், நிதி அமைச்சரு மான நாராயணசாமி தாக்கல் செய்யவி ருக்கும் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மாநில திட்டக்  குழு கூடி பட்ஜெட் தொகையாக ரூ.8 ஆயிரத்து  425 கோடி நிர்ணயித்தது. இதற்கான கோப்பு களுக்கு அனுமதி பெற காலதாமதம் ஆன தால் இம்மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.