2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, 2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
மேலும் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் மார்ச் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதனைதொடர்ந்து பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் நடைபெறுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18 ஆம் தேதி அன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் . பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.