tamilnadu

img

அசாம் மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்?

கவுகாத்தி:
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பாஜக-காரர். அவர் அசாம்மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தாம் நம்புவதாக தருண்கோகய்தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அசாம்சட்டமன்றத் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் பாஜகவுக்கான முதல்வர் வேட்பாளராக இருக்கலாம்என்று அசாம் முன்னாள் முதல்வர் தருண்கோகய் தெரிவித்துள்ளார்.அசாம் முன்னாள் முதல்வரும், மூத்தகாங்கிரஸ் தலைவருமான தருண் கோகய் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகய்யின் பெயர் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அசாம்மாநிலத்துக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் எதிர்பார்க்கப்படுவார் என்றுநான் சந்தேகிக்கிறேன். “எல்லாமே அரசியல் தான்”. அயோத்திராமர் கோவில் வழக்கு தீர்ப்பிற்கு பின் ரஞ்சன்கோகய் மீது பாஜக பாசமாக இருந்தது. பின்னர்படிப்படியாக மாநிலங்களவை மூலம் அரசியலில் நுழைந்தார். அவர் ஏன் மாநிலங்களவைஉறுப்பினர் பொறுப்பை மறுக்கவில்லை?அவர் எளிதில் மனித உரிமை ஆணையம் அல்லது பிற உரிமை அமைப்புகளின் தலைவராக இருந்திருக்க முடியும். அவருக்கு அரசியல் லட்சியம் உள்ளது, அதனால்தான்அவர் மாநிலங்களவை நியமனத்தை ஏற்றுக் கொண்டார் என்று கோகய் கூறினார்.ரஞ்சன் கோகய், அசாமின் ஒன்பதாவது முதல்வராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த கேஷாப் சந்திர கோகய்யின் மகன் ஆவார்.