tamilnadu

img

நீதித்துறை சுதந்திரத்தைப் பேச உங்களுக்கு என்ன தகுதி?

புதுதில்லி:
“நீதித்துறையின் சுதந்திரம்” குறித்த விவாதத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் கலந்துகொண் டதை மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி விமர்சித் துள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும்நீதித்துறையின் சுதந்திரத் தன்மை குறித்து விவாதிப்பதற்கே வெபினார் (Webinar)ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் கலந்துகொண்டு,பேசுவதற்கு ரஞ்சன் கோகோய் தகுதியானவரா? என்ற கேள்வி எழுகிறது.ஏனெனில், தலைமை நீதிபதி பதவியிலிருந்த ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே மாநிலங்களவை எம்.பி.யாகபதவியேற்றுக் கொண்டதாக இருக்கட்டும், பாலியல் சீண்டல் புகார் தெரிவித்த பெண் ணின் வழக்கு விஷயத்தில் நடந்து கொண்டதாகட்டும், தனக்கு முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகட்டும்- அனைத்திலும், தன் மீதான குற்றங்களை மறைத்துக்கொள்ள தயங்காதவர் ரஞ்சன் கோகோய் என்றுதிவிவேதி சாடியுள்ளார்.

இவர் மீது புகார் கொடுத்தகாரணத்திற்காக, சம்பந்தப் பட்ட பெண்ணின் குடும்பத்தினர், எந்தளவிற்கு நெருக்கடிக்கு உள்ளானார்கள் என் பதை நாம் மறந்துவிட முடியாது என்றும் திவிவேதி குறிப்பிட்டுள்ளார்.