tamilnadu

img

தேவையற்ற கருவை கலைக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேறியது

புதுதில்லி:
மருத்துவரீதியாக பெண்கள் தேவையற்ற கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா மக்களவையில்  நிறைவேறியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அதன்படி கருக்கலைப்பு செய்வதற்கான கர்ப்பக்கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த சட்டத்திருத்தம்அனுமதி வழங்குகிறது. பாலியல் பலாத்கார சம்பவங்களில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பிற பாதிப்புகளுக்கு இலக்கான பெண்கள் இவர்களில் அடங்குவர்.