70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாயன்று புதுதில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கிய நிலையில், 4 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படமான “பொன்னியின் செல்வன் - 1” திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் 7ஆவது முறையாக தேசிய திரைப்பட விருதை பெற்றார். அதே போல “பொன்னியின் செல்வன் - 1” திரைப்பட இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோரும் தேசிய விருதுகளை கையில் ஏந்தினர். மேலும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது. சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனனும், சிறந்த நடன இயக்குநருக்கான விருதை சதீஷ் ஆகியோரும் ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டனர்.