tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு தேவாரத்தில் உண்டியல் ஏந்தி வசூல் ஒரே நாளில் ரூ.74,310 வாரி கொடுத்த மக்கள்

தேனி, டிச.20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் மாதத்  தில் மதுரையில் நடைபெறுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற மாவட்ட அளவில் வர வேற்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  தேவாரத்தில் வியாழனன்று ஒரு நாள் உண்டியல் வசூல் செய்ய கட்சியின் இடைக்  கமிட்டி முடிவு செய்து களத்தில் இறங்கி யது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பல குழுக்களாக பிரிந்து வசூலில் ஈடுபட்டனர். வீடு வீடாகவும், கடைகள், வணிக நிறு வனங்களில் நிதி திரட்டப்பட்டது. ஒரே நாள்  உண்டியல் வசூலில் ரூ.74,310 திரண்டது. வசூல் இயக்கத்தில் மாவட்டச் செய லாளர் எம்.ராமச்சந்திரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.வெண்மணி, ஏரியாச் செயலாளர் டி.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினரும், பண்ணைப்புரம் பேரூ ராட்சி துணைத் தலைவருமான எஸ்.சுருளி வேல், விவசாய தொழிலாளர் சங்க மாவ ட்டத் தலைவர் சி.வேலவன், ஏரியாக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம்,  எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ்.பி.ரத்தினம், கே.ராஜா, சாந்தி, எஸ்.குமரேசன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.