மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி நடராஜன், மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.50,000/- சாமி நடராஜனிடம் வழங்கப்பட்டது.