tamilnadu

img

ஆந்திராவிலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து....

விஜயவாடா 
கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்திவிட்டு 1 முதல் 11-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதில் 10-ஆம் வகுப்பு தேர்வு பல்வேறு சிக்கலுக்கு இடையே ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான ஆந்திராவிலும் 10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஆடிமுழப்பு சுரேஷ் அறிவித்துள்ளார். ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலமும் 10-ஆம் வகுப்பு தேர்வை ஏற்கெனவே ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.