tamilnadu

பட்டியல் வகுப்பிற்குள் துணைப்பிரிவை அனுமதிக்கும் தீர்ப்பு சரியானதே!

புதுதில்லி, அக். 4 - பட்டியல் வகுப்பினருக்குள்ளே பின் தங்கியவர்களைக் கண்டறிந்து, அவர் களை துணைப்பிரிவாக வகைப்படுத்தி உள் இடஒதுக்கீடு வழங்கத் தடை யில்லை என்று தாங்கள் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

மேலும், இந்த தீர்ப்பை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பட்டியல் வகுப்பினருக்கு உள்ளேயே பின்தங்கியவர்களை துணைப்பிரிவாக வகைப்படுத்தி அவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

இதில், ஆந்திர அரசு வழங்கிய உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இ.வி. சின் னையா என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதி பதிகள் என். சந்தோஷ் ஹெக்டே, எஸ்.என். வரிவா, பி.பி.சிங், எச்.கே. சேமா, எஸ். பி.சின்ஹா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வானது, “உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதி காரம் இல்லை” என்று 2005-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

ஆனால், பஞ்சாப் மாநிலத்திற்கு எதி ராக டேவிந்தர் சிங் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலை மையிலான உச்ச நீதிமன்றத்தின் 5 நீதி பதிகள் அடங்கிய மற்றொரு அரசியல் சாசன அமர்வானது, “பட்டியலினத்த வருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு” என்று 2020-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

எனவே, இந்த விவகாரத்தில் எது  இறுதியான தீர்ப்பு என்பதை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியை உள்ளடக்கிய 7 நீதிபதிகள் கொண்ட அர சியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

அதனடிப்படையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையி லான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆகஸ்ட் 1 அன்று தீர்ப்பு வழங்கியது. 

அதில், பெரும்பான்மையாக- தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர சர்மா ஆகிய 6 நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டி யல் வகுப்பில் இடம்பெற்றுள்ள சாதிகள் அனைத்தும் ஒத்த வகையினது (Homogenous) அல்ல. 

எனவே, அவர்களுக்குள் ஒரு  தரப்பு மட்டுமே பலன்களை அனு பவிக்கும் பட்சத்தில் மாநில அரசு தலை யிட முடியும்; பயனடைய முடியாத பிரி வினரை கணக்கில் எடுத்து துணைப் பிரிவுகளாக (Sub-Classification) வரையறுத்து, உள் இடஒதுக்கீடு (Sub-Quota) வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரை யறையில் இருந்து விலக்கப்படாத நிலை யில், அவர்களை வகைப்படுத்துவது (Sub-Classification) அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341 குடியரசுத் தலை வருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுவது ஆகாது; உள் ஒதுக்கீடுகள் போதிய தரவுகளோடு அது மேற் கொள்ளப்பட்டிருந்தால் அது செல்லத் தக்கதே!. அந்த வகையில், மாநில அரசு கள் கொண்டுவந்த உள் இடஒதுக்கீடு சட்டங்கள் செல்லும்” என்று தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பேலா எம் திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். 

இத்தீர்ப்பு மூலம் தமிழகத்தில் அருந்த தியர் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3 சத விகித உள் இடஒதுக்கீடும் பாதுகாக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், சிலர் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தான், தங்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்துள் ள உச்சநீதிமன்றம், “சீராய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தங்களின் தீர்ப்பில் எந்தப் பிழையும் இருப்பதை பார்க்க வில்லை. உச்சநீதிமன்ற விதிகளின் கீழ், தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு உரிய பொருத்தமான காரணம் எதுவும் நிறுவப்படவில்லை. எனவே, மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு மேலும் வலுவான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.