tamilnadu

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 23 மற்றும் 24

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 23 மற்றும் 24வது பிரிவுகளின் படி, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தான் செய்யும் வேலைக்கும் உழைப்பிற்கும் தகுந்த ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையை அளிக்கிறது. கண்ணியமாய் வாழ்வதற்கான உரிமையையும் அது உத்தரவாதப்படுத்துகிறது. கண்ணியமாய் வாழ அடிப்படை தேவைகள், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றால் போதுமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும். வருமானம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் சட்டத்தை திருத்தி வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். இதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதிபடக் கூறியுள்ளது.வேலை என்பதை அரசியல் சாசன உரிமையாக மாற்றிட வேண்டும் என்பதால் உறுதியாக உள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வெளியிட்ட தேர்தல் அறிக்கைதான், இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆகும். எஸ். பாலா