புதுதில்லி;
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், பெண்களுக்கு தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக 2 ஆயிரத்து 43 புகார்களை அளித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான புள்ளிவிவரத்தை தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் மொத்தம் 2 ஆயிரத்து 43 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்துள்ளதாகவும், இதில், அதிகபட்சமாக, கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக 603 புகார்களையும், குடும்பவன்முறை தொடர்பாக 452 புகார்களையும், வரதட்சணைக் கொடுமைகுறித்து 252 புகார்களையும் பெண்கள் அளித்துள்ளதாக குறிப்பிடப் பட்டு உள்ளது.இவைதவிர, பாலியல் தொந்தரவு (194 புகார்கள்), போலீஸ் அடக்குமுறை (113 புகார்கள்), சைபர் குற்றங்கள் (100 புகார்கள்), பாலியல் வல்லுறவு முயற்சி (78 புகார்கள்), பாலியல் துன்புறுத்தல் (38 புகார்கள்)உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாகவும் பெண்கள் புகார்களை அளித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இதுதொடர்பாக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில், “சமூக ஊடக தளங்களில்மகளிர் ஆணையத்தின் செயல்பாடு அதிகரித்துள்ளதால் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டுவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் இருந்தும் நாங்கள் புகார்களை பெறுகிறோம். புகார் களுக்காக தற்போது வாட்ஸ்-ஆப்எண் வெளியிட்டுள்ளோம். நாங்கள்உதவி செய்வது அறிந்து, எங்கள்மீது நம்பிக்கை வைத்து பெண்கள்பலர் எங்களை அணுகி வருகின்றனர். எங்களின் சமூக ஊடக செயல் பாடு காரணமாகவே எங்களிடம் குடும்பவன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. வாட்ஸ்-ஆப்எண்ணில் எங்களை அணுகுவதுபெண்களுக்கு எளிதாக உள்ளது.பெண்கள் நலனுக்காகவும் அவர் கள் அதிகாரம் பெறுவதற்காகவும் மகளிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. எனவே பெண்கள் எந்தநாளிலும் எந்த நேரத்திலும் எங்களைஅணுகலாம்” என்று ரேகா சர்மா கூறியுள்ளார்.
40 நாட்களில் மட்டும் 24 குழந்தை திருமணங்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் பொது முடக்க காலத்தில் மட்டும் 204 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெலுங் கானா சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அதிகாரி புருந்தாதர் ராவ், “பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகள் வீட்டில் இருப்பதால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், திருமணம் செய்துவிட்டால், தங்கள் கடமை முடியும் என்றுபெரும்பாலான குடும்பங்கள் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.