சென்னை,ஜூலை 27- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை யொட்டி சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குநர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார். மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 1896 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தமிழக வருகையை நினைவுகூரும் வகையில் வருகிற 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு தபால் வட்டம் சிறப்பு தபால் உறைகளையும், தபால் முத்திரையையும் வெளியிட திட்டமிட்டது. அதன்படி, முதல் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு தபால் வட்ட தலைமை இயக்குநர் சம்பத் சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் வெளியிட்டார்.