அயோத்தி:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் அமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி அயோத்தி ராமர் கோயில் 128 அடி உயரமும், 140 அடி அகலமும் கொண்டதாக அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், 212 கற்தூண்கள் கோயிலைத் தாங்கும் என்றும் அத்துடன் 5 நுழைவாயில்கள் கொண்டதாக கோயில் இருக்கும் என்றும்; தற்போதே 106 தூண்கள் தயாராக இருப்பதாகவும் விஎச்பி அமைப்பினர்தெரிவித்துள்ளனர்.
விஎச்பி அமைப்பு, 1989-ஆம் ஆண்டே கோயில் கட்டுமானத்திற்கான வடிவமைப்பை உருவாக்கி, கட்டுமானப் பொருட்களைச் சேகரித்து வந்தது. இதன்படி கட்டுமானத்திற்கான 60 சதவிகிதப் பணிகள் ஏற்கெனவே முடிந்து விட்டதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.மேலும், விஎச்பி-யின் வடிவமைப்பு அடிப்படையிலேயே கோயில் அமையும் என்றும், கோயில் கட்டமைப்புக்கு இரும்பு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.