நாமக்கல், ஜூன் 23- நாமக்கல் அருகே கொச வம்பட்டி பாரதி நகரில் மஞ் சள் நிறமாக மாறிய குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை யில், அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொசவம்பட்டி யில் நகராட்சி குப்பைகள் முழுவதும் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்ப குதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப் பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மஞ்சள் நிறமாகமாறி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆழ் துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் மஞ்சள் நிறமாக மாறியுள்ள குடிநீரை பயன்படுத் தும்போது கை, கால்கள் அரிப்பு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டுள் ளது.
எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் குப்பை கழிவுகள் கலந்து வரு வதை தடுத்து நிறுத்த வேண்டும் இப்பகு திக்கு காவிரி குடிநீர் சமீபகாலமாக முறை யாக விநியோகம் செய்யப்படாததால் காவிரி குடிநீர் தினசரி கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதி நகர் கிளைச் செயலாளர் கே.செல்வம் தலைமை யில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், நாமக்கல் பிரதேசச் செயலாளர் பி.ஜெய மணி, சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.